In Stock

Karun Kuruvai Rice

This product is currently out of stock and unavailable.

SKU: N/A Category:

Description

கருங்குறுவை மாமருந்து

  • பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை.
  • சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த நெல் ரகத்தின் வயது நூற்றி பத்து நாள்.
  • நெல் கறுப்பாகவும் அரிசி சிவப்பாகவும் இருக்கும். நான்கு அடிவரை வளரும்.
  • நீர் நின்றாலும் தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கக் கூடியது.
  • கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம்.
  • கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும்.
  • கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது.
  • மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ளது.

 

நோய் எதிர்ப்பு சக்தி

  • இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறிவிடும்.
  • அதற்கு `அன்னக்காடி’ என்று பெயர்.
  • காடி என்றால் மருந்து என்று அர்த்தம்.
  • இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான காலரா மட்டுப்படும்.
  • கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.
  • நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.
  • குறுவை நெல் மணிகள் ஒரு வருடம் பூமியில் கிடந்தாலும் மக்கிப்போகாது.
  • ஒரு வருடம் கழித்துக்கூட முளைக்கும் தன்மை உடையது.
  • தமிழகம் தவிர இந்த நெல் கர்நாடகம், கேரள மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

Additional information

Weight 1 kg
Dimensions 31 × 12 × 23 cm
Weight

1Kg, 5Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.